உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி

தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி

திண்டிவனம்: தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, சிறப்பு பூஜை நடந்தது. அதனையொட்டி, நேற்று மாலை விநாயகருக்கு திரவிய பொடி,  மஞ்சள்,  பால்,  தயிர், உள்ளிட்ட  பல பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து யாகசாலை வேள்வியும், பூஜிக்கப்பட்ட கலசங்கள் உட்பிரகாரம் வலம் வந்து, 108 சங்காபிஷேகமும், கலச நீரால் மூலவருக்கு அபிஷேகமும் செய்யப்பட்டது. பின், அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கோவில் உட்பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சியும், ஊஞ்சல் உற்சவமும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !