ரிஷிவந்தியம் மகா மாரியம்மன் கோவில் தேர்திருவிழா
ரிஷிவந்தியம்: பாசார் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவில் தேர்திருவிழா நடந்தது.
ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தில் உள்ள மகாமாரியம்மன் கோவில் தேர்திருவிழா கடந்த ஜூன் 26ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு சுவாமி வீதியுலா, பாரதம் பாடுதல், கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. கடந்த 2ம் தேதி காத்தவராயன் ஆரியமாலா சுவாமி திருக்கல்யாணமும், நேற்று முன்தினம் காலை தீமிதி திருவிழாவும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். சாகை வார்த்தல் நிகழ்ச்சிக்கு பிறகு, அலங்கரிக்கப்பட்ட உற்சவர் மகா மாரியம்மன் சுவாமியை தேரில் எழுந்தருள செய்தனர். தொடர்ந்து, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தேரினை முக்கிய தெருக்கள் வழியாக இழுத்து சென்றனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள், கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.