உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரத்தில் திடீரென கடல் உள்வாங்கியது

ராமேஸ்வரத்தில் திடீரென கடல் உள்வாங்கியது

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் துறைமுகம் கடற்கரையில் திடீரென கடல் உள்வாங்கியதால் பாசி படர்ந்த மணல் பரப்பு வெளியில் தெரிந்தது.


ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி பகுதியில் சில நாட்களாக தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்து சூறாவளி காற்றாக வீசுகிறது. இதனால் இன்று ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை ராமேஸ்வரம் துறைமுகம் கடற்கரையில் திடீரென 200 மீ., தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. இதில் பாசி படர்ந்த மணல் பரப்பு வெளியில் தெரிந்தது. இதனால் கரையில் நிறுத்தி இருந்த நாட்டுப்படகுகள் தரைதட்டி கிடந்தது. பின் மதியம் 2 மணிக்கு மேல் கடல்நீர் மட்டம் உயர்ந்ததும், கடற்கரை இயல்பு நிலைக்கு திரும்பியது. தென்மேற்கு பருவக்காற்று சீசனில் கடல்நீர் உள்வாங்குவதும், சில மணி நேரத்திற்கு பின் மீண்டும் கடல் இயல்பு நிலைக்கு திரும்புவது சகஜம் என மீனவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !