கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ஏகாதசி சிறப்பு பூஜை
ADDED :3 hours ago
கோவை; ஆனி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. தொட்ர்ந்து ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சி நடந்தது. இதில் உற்சவ மூர்த்தி மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.