உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரராகவ பெருமாள் கோவிலில் மண்டல அபிஷேகம் நிறைவு

வீரராகவ பெருமாள் கோவிலில் மண்டல அபிஷேகம் நிறைவு

 விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த சாமியாடி குச்சிபாளையம் வீரராகவ பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. இக்கோவிலில் கடந்த 48 நாட்களுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்து, மண்டல அபிஷேக பூஜை தினமும் நடந்தது. நேற்று மண்டல அபிஷேக நிறைவையொட்டி மகா கணபதி ஹோமம், மகா சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடந்தது. தொடர்ந்து மூலவர் வீரராக பெருமாளுக்கும், தாயாருக்கும் உற்சவர்களுக்கும் திருமஞ்சனம் மற்றும் அலங்காரமும் மகா தீபாராதனையும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு, உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத வீரராகவ பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி வீதியுலா வந்தது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !