திருநள்ளாறு கோவிலில் தேவகவுடா தரிசனம்
ADDED :6 hours ago
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறில் அமைந்துள்ள தர்பார்னேஸ்வரர் கோவிலில், அனுக்கிரக மூர்த்தியாக சனீஸ்வர பகவான் தனிச் சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் சனிப்பெயர்ச்சி முடிந்து அரசியல் கட்சியினர் மற்றும் திரைப்பட பிரபலங்கள் பலர் சனீஸ்வரன் பகவானை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்னாள் பிரதமர் தேவகவுடா சாமி தரிசனம் செய்ய வந்தார். அவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவர், தர்பாரண்யேஸ்வர், விநாயகர், முருகன், அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளை தரிசனம் செய்தார். பின்னர், தனது குடும்பத்துடன் சனீஸ்வர பகவானுக்கு தீபம் ஏற்றி சிறப்பு தரிசனம் செய்தார். பின்னர் சாலை மார்க்கமாக திருச்சிக்கு புறப்பட்டு சென்றார்.