உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிந்தவாடி திரவுபதியம்மன் கோவிலில் அர்ச்சுனன் தபசு

கோவிந்தவாடி திரவுபதியம்மன் கோவிலில் அர்ச்சுனன் தபசு

 காஞ்சிபுரம்: கோவிந்தவாடி திரவுபதியம்மன் கோவிலில், அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நேற்று விமரிசையாக நடந்தது.

காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி அகரம் கிராமத்தில், திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இங்கு, அக்னி வசந்த பெருவிழா 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம், அர்ச்சுனன் தவமும், அம்மையப்பன் அருளும் என்னும் தலைப்பில், சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த லதா என்பவர் மகாபாரத சொற்பொழிவு மற்றும் அர்ச்சுனன் தவ நிலை நாடகம் நடந்தது. நேற்று காலை 7:30 மணி முதல் 10:30 மணி அளவில் அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதில், வேடுவர் வேடத்தில், அம்மையப்பன் எழுந்தருளி அர்ச்சுனனின் தவத்தை கண்டு, பாசுபதாஸ்திரத்தை வரமாக வழங்கினர். பாசுபதாஸ்திரம் என்பது, மற்ற எந்த அஸ்திரங்களாலும் இதை முறியடிக்கவோ, தடுக்கவோ முடியாது. சிவபெருமானிடமிருந்தோ அல்லது ஆதிபராசக்தியிடமிருந்தோ மட்டுமே இதை நேரடியாக பெற முடியும். இன்று, மச்ச நாட்டின் மகிமையும், கீசகன் வதம் சொற்பொழிவு மற்றும் நாடகம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !