உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்திர தரிசனம்; மூன்றாம் பிறை தரிசிக்க சிவபெருமானை நேரில் தரிசித்த புண்ணியம் கிடைக்கும்!

சந்திர தரிசனம்; மூன்றாம் பிறை தரிசிக்க சிவபெருமானை நேரில் தரிசித்த புண்ணியம் கிடைக்கும்!

சந்திரனே மனதிற்கும் உடலுக்கும் அதிபதி. ஒருவர் சரியான முடிவு எடுக்க சந்தினின் அருள் அவசியம். ஒருவருடைய மன அமைதி, சிந்தனை, கற்பனைத் திறன், ஆரோக்கியத்திற்கு சந்திரனின் பலம் அவசியமாகும். 


கிரக தோஷம், பெயர்ச்சி, நோய் தொற்று என நம் மனம், உடல், ஆயுளைப் பாதிக்கும் விஷயங்கள் நிறைய  உள்ளன. இவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் சக்தியை மூன்றாம்பிறையன்று சந்திரன் அளிக்கிறார். மூன்றாம் பிறை தரிசனம் செய்தால் வருமானம், செல்வ செழிப்பு உண்டாகும். மூன்றாம் பிறை பார்க்க முடியாவிட்டால் வீட்டில் சிவ வழிபாடு செய்யலாம். சிவன் தலையில் இருக்கும் சந்திரனை இன்று தரிசனம் செய்வது சிறப்பு. மனதில் களங்கம் இல்லாத துாய பக்தி கொண்டவர்களை சிவன், தன் தலையில் வைத்துக் கொண்டாடுவார் என்பதை இதன் மூலம் உணர்த்துகிறார். ஆகவே மூன்றாம் பிறை பார்ப்பது நல்லது. சந்திர தரிசனம் செய்வதால் ஆரோக்கியம், ஆயுள் விருத்தி உண்டாகும். சந்திரனைத் தரிசிப்பது சிவபெருமானையும், சந்திர பகவானையும் ஒரே நேரத்தில் வழிபட்ட புண்ணியத்தைத் தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !