காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
ADDED :2 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் செவ்வாய்க்கிழமை 14-07-2026 அன்று, கோயில் வளாகத்தில் உள்ள 16 கால் மண்டபத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயசுவாமிக்கு, கோயில் வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. பின்னர், இறைவனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, தீப தூபம், மகா தீபாராதனை எடுக்கப்பட்டது தொடர்ந்து நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீ ஆஞ்சநேயசுவாமியைத் தரிசித்து இறைவனின் ஆசிகளைப் பெற்றனர். கோயில் அர்ச்சகர்கள் பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதங்களை வழங்கினர்.