பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் திருமஞ்சன விழா
ADDED :3 days ago
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பூவரசன்குப்பம் அமிர்தவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவிலில் திருமஞ்சன விழா நடந்தது. அதனையொட்டி நேற்று காலை 8:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவர் பெருமாளுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் லட்சுமி நரசிம்மர் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அமிர்தவல்லி தாயாருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், மகா தீபாராதனை நடந்தது. இதேபோல், ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.