உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாகூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

பாகூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

பாகூர்: குடியிருப்புபாளையம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், அமாவாசையையொட்டி, ஊஞ்சல் உற்சவம் நடந்தது.


பாகூர் அடுத்த குடியிருப்புபாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள் ளது. இக்கோவிலில், அமாவாசையையொட்டி ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அதனை யொட்டி, நேற்று முன்தினம் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பால், தயிர், தேன், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, இரவு 8:00 மணியள வில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில், சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஊஞ் சலில் அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 9:00 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர் களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமா னோர் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !