உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் ஆடித்தபசு விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் ஆடித்தபசு விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ளது.


சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானம் நிர்வாகத்துக்கு உட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் வருடம் தோறும் ஆடித்தபசு திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று துவங்கியதை முன்னிட்டு கொடியேற்ற விழாவிற்காக ஆனந்தவல்லி அம்மன் சர்வ அலங்காரங்களுடன் கொடி மரத்திற்கு முன்பாக எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கொடி மரத்திற்கு பூஜைகள்,அபிஷேக ஆராதனைகளை செய்தனர். முன்னதாக காலை11:00 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்ற பிறகு 18 வகையான மூலிகை பொருட்களால் கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் ஆனந்தவல்லி அம்மனுக்கு தீபாராதனைகள் நடைபெற்ற பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கொடியேற்ற விழாவில் மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நடைபெறும் 10 நாட்களும் அம்மனும் சுவாமியும் அன்னம், கமலம்,யானை, கிளி, விருஷபம்,காமதேனு, குதிரை,பூப்பல்லாக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளின் வழியே வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு வருகிற 27ம் தேதி நடைபெற உள்ளது. மறுநாள் 28ம் தேதி சந்தன காப்பு உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகிகள்,அர்ச்சகர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !