உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகாசி சிவன் கோயிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

சிவகாசி சிவன் கோயிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

சிவகாசி: சிவகாசி சிவன் கோயிலில் ஆடி தபசு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.


சிவகாசி சிவன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி தபசு திருவிழா நடைபெறும். அதன்படி இன்று கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இரவு 7:00 மணி அளவில் ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் சுவாமி அம்பாள் யானை, சிம்மம், காமதேனு, கிளி, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். 9 ம் நாள் திருவிழாவான ஜூலை 26 ல் தேரோட்டம் நடைபெறும். 11 ம் நாள் திருவிழாவான ஜூலை 28 ல் விஸ்வநாதர் ரிஷப வாகனத்தில் விசாலாட்சி அம்பாளுக்கு தபசு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !