உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று ஆடி பஞ்சமி; வராஹியை வழிபட தடைகள் நீங்கி வெற்றி கிட்டும்.

இன்று ஆடி பஞ்சமி; வராஹியை வழிபட தடைகள் நீங்கி வெற்றி கிட்டும்.

ஆடி மாத வளர்பிறை பஞ்சமி என்பது வராஹி அம்மனுக்கு உகந்த நாளாகும். தீய சக்திகளை அழித்து பக்தர்களை காக்கும் காவல் தெய்வம் வராஹி. வராஹி தேவிக்கு இந்நாளில் அரளி மலர்களால் அர்ச்சனை செய்து, மாதுளை, கிழங்கு நைவேத்தியம் படைப்பது விசேஷம்.


வராஹியை வழிபட ஏற்ற திதி பஞ்சமி. வளர்பிறை, தேய்பிறை பஞ்சமி திதியன்று வழிபட்டால் உடனடியாக நற்பலன் கிடைக்கும். வாராஹி அர்ச்சனை மந்திரங்களில் ‘ஆஷாட பஞ்சமி பூஜன ப்ரியாயை நமஹ’ என்றொரு வரி உண்டு. ஆஷாட பஞ்சமியில் செய்யப்படும் பூஜையைப் விருப்பமுடன் ஏற்பவள் என்பது பொருள். பஞ்சமி திதிக்கு உரியவள் என்பதால் ‘பஞ்சமி’ என்றும் பெயருண்டு. பஞ்சமியன்று விளக்கேற்றி வழிபட்டால் எதிரி பயம், கடன் தொல்லை, நிலப்பிரச்னை தீரும். மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. வீட்டில் வராஹி அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் வரம் கிடைக்கும். இன்று வராஹியை வழிபட வாழ்வில் எதிரிகள் தொல்லை, தீராத பிணிகள் நீங்கும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !