ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருப்பூருக்கு 20ம் தேதி விஜயம்
திருப்பூர்: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 20ம் தேதி திருப்பூர் வருகிறார். வரும் 21 மற்றும் 22ம் தேதிகளில் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.
சுவாமிகள், கேரளாவில் விஜயம் மேற்கொண்டுள்ளார். வரும், 20ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, பாலக்காட்டில் இருந்து திருப்பூர் வருகிறார். திருப்பூர் பல்லடம் ரோடு, ெஷரீப் காலனி, வாய்க்கால் தோட்டம், 24 மனை தெலுங்கு செட்டியார் கல்யாண மண்டப அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் உள்ள, ஸ்ரீ காஞ்சி காமாட்சி கோவிலுக்கு வருகிறார். தங்க கோபுர காமாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பாக பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து, இரவு 8:00 மணி வரை பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். வரும், 21ம் தேதி காலை, 8:30 மணிக்கு மீண்டும் தரிசனம் தருகிறார் காலை 9.30 மணி முதல் 12:00 மணி வரை வேத பாராயணம் நடைபெறுகிறது. மாலை 6.00 மணிக்கு திருப்பூர் தொழில் துறையினருக்கு அருளாசி வழங்குகிறார். வரும், 22ம் தேதி காலை, 8:00 மணி முதல், பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வருகையை ஒட்டி, ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம மற்றும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் நடைபெறும். முன்னதாக, திருப்பூர் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் கிளை மடத்துக்கு வந்தும், அருளாசி வழங்க இருக்கிறார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, 24 மனை தெலுங்கு செட்டியார்கள் கல்யாண மண்டப அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும்,ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் திருப்பூர் கிளை – ராமகிருஷ்ண பஜனை மடத்தின் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.