கோவை உக்கடம் சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் பஞ்சமி வழிபாடு
ADDED :4 hours ago
கோவை ; ஆடி மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை உக்கடம் பைபாஸ் சுண்டக்கா முத்தூர் ரோடில் அமைந்திருக்கும் ஸ்ரீ சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் அமைந்துள்ள வாராஹி அம்மனுக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் செந்தூர காப்பு அலங்காரத்துடன் புஷ்ப அலங்காரத்தில் வாராஹி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.