பூரி ஜெகன்னாதர் ரத யாத்திரை: குண்டிச்சா கோவில் வந்தது மூன்று தேர்கள்
ஒடிசா; ஒடிசாவில் ஒன்பது நாட்கள் நடைபெறும் வருடாந்திர பூரி ஜெகன்னாதர் ரத யாத்திரையில் பக்திமயமான சூழலில், தெய்வங்களின் மூன்று தேர்களும் ஸ்ரீ குண்டிச்சா கோயிலின் முன்பாக வந்து சேர்ந்துள்ளன.
ஒடிசாவில் உலகப் புகழ் பெற்ற புரி ஜெகந்நாதா் கோயில் ரத யாத்திரை வியாழக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. இந்த விழாவில், ஜெகந்நாதா், அவரது சகோதரா் பலபத்திரா், சகோதரி சுபத்திரை ஆகிய மூன்று கடவுள்களின் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட ரதங்கள், பிரதான கோயிலில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள அவா்களின் பிறப்பிடமாக கருதப்படும் குண்டிச்சா கோயில் வரை இழுக்கப்படும். புரி நகரில் பலத்த மழையையும் பொருள்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தா்கள் ரத யாத்திரயில் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர். இதில் பல அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் இன்று மூன்று தேர்களும் ஸ்ரீ குண்டிச்சா கோயிலின் முன்பாக வந்து சேர்ந்துள்ளன. இங்கு ஒருவார காலம் ஜெகநாதர் ஓய்வெடுப்பார். பின்னர் மீண்டும் தேர்கள் புறப்பட்டு ஜெகநாதர் கோயிலை வந்தடைந்ததும் ரத யாத்திரை ஜூலை 24 அன்று நிறைவுபெறுகிறது.