உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீசெல்லாண்டியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழா நாளை துவக்கம்

ஸ்ரீசெல்லாண்டியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழா நாளை துவக்கம்

திருப்பூர்: திருப்பூரின் காவல் தெய்வமாக பக்தர்கள் வழிபடும், ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவிலின் 20-வது ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா, நாளை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. ஆடிக்குண்டம் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


வரும் 28-ம் தேதி குண்டம் திருவிழா நடைபெறுகிறது. அதையொட்டி, கடந்த 16-ம் தேதி கிராமசாந்தி, 17-ம் தேதி பூச்சாட்டு விழா நடைபெற்றது. இன்று மகாமுனி பூஜையும், நாளை கொடியேற்றமும் நடைபெறுகிறது. நொய்யல் ஆற்றங்கரையில் இருந்து சக்தி அழைத்து வரப்பட்டு, தினமும் காலை, மாலை சிறப்பு அபிஷேகம், மகா அலங்கார பூஜைகள் நடைபெற உள்ளன. சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வந்து, அம்மை அழைப்பு மற்றும் அம்மன் திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும். வரும் 27-ம் தேதி குண்டத்துக்கு அக்னி இடும் பூஜையும், 28-ம் தேதி காலை குண்டம் திருவிழாவும், அக்னி அபிஷேகம், மாவிளக்கு, பொங்கல் வழிபாடும் நடைபெறுகின்றன. திருவிழாவையொட்டி, 22-ம் தேதி மீனாட்சி, 23-ம் தேதி அகிலாண்டேஸ்வரி, 24-ம் தேதி சமயபுரம் மாரியம்மன், 25-ம் தேதி அங்காளம்மன், 29-ம் தேதி மகாலட்சுமி, 31-ம் தேதி ஸ்ரீ வாராஹி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !