உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி முருகன் கோயிலில் இரண்டு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

பழநி முருகன் கோயிலில் இரண்டு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

பழநி: பழநி முருகன் கோயிலில் விடுமுறை காரணமாக பக்தர்களின் அதிக கூட்டம் இருந்தது. அவர்கள் விரைந்து தரிசனம் செய்ய கால பூஜையில் நிரந்தர, ஆன்லைன் கட்டளைதாரர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பழநி முருகன் கோயிலுக்கு விடுமுறை நாளான நேற்று ஏராளமான வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் வருகை புரிந்தனர். கோயிலுக்கு செல்ல பக்தர்கள், ரோப் காரில் பல மணி நேரம் காத்திருந்தனர். பழநி கோயிலுக்கு செல்ல குடமுழுக்கு மண்டபம் வழியாக பக்தர்களை அனுமதித்தது. கோயிலில் பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் இரண்டு மணி நேரம் பக்தர்கள் காத்திருந்தனர். வெளிபிரகாரத்தில் மருத்துவ வசதி, தண்ணீர் வசதி செய்யப்பட்டு இருந்தது. பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்ய கால பூஜையில் நிரந்தர கட்டளைதாரர்கள், ஆன்லைன் டிக்கெட் மூலம் கால பூஜை தரிசனம் அனுமதி பெற்றவர்கள் மட்டும் கோயில் நிர்வாகம் அனுமதித்தது. இதனால் தரிசன வரிசையில் பக்தர்கள் தடையின்றி தொடர்ந்து தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !