ஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சுவாமிகளுக்கு திருப்பூரில் பூர்ண கும்ப மரியாதை
திருப்பூர்: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின், 70வது பீடாதிபதி ஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சுவாமிகள், நேற்று திருப்பூர் வந்தடைந்தார்.
ஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சுவாமிகள், கேரள மாநிலத்துக்கு விஜயம் செய்து, பல்வேறு கோவில்களில் வழிபட்டார்; பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். நேற்று இரவு, 9:45 மணிக்கு, திருப்பூர் ெஷரீப் காலனி ஸ்ரீகாமாட்சியம்மன் கோவிலுக்கு வந்தார். ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம், திருப்பூர் மடத்தின் கிளை நிர்வாகிக ள், காமாட்சியம்மன் கோவில் நிர்வாகிகள், பூர்ண கும்ப மரியாதையுடன் சுவாமிகளை வரவேற்றனர். முன்னதாக, அவிநாசி அருகே அம்மாபாளையத்தில், ஸ்ரீகுரு க்ருபா சேவா அறக்கட்டளை சார்பில், சுவாமிகளுக்கு பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இன்று காலை, 8:30 மணிக்கு சுவாமிகளின் தரிசனம் நடைபெறும்; காலை, 9:30 முதல், 12:00 மணி வரை, வேத பாராயணம் நடைபெறும். மாலை 6.00 மணிக்கு திருப்பூர் தொழில் துறையினருக்கு அருளாசி வழங்குகிறார். நாளை (22ம் தேதி) காலை, 8:00 மணி முதல், பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். சுவாமிகள் வருகையை ஒட்டி, ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம மற்றும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் நடைபெறும். பக்தர்களுக்கு, பிரசாதம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, திருப்பூர் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் கிளை மடத்துக்கு சுவாமிகள் விஜயம் செய்கிறார். நாளை மாலை சேலம் புறப்பட்டு செல்கிறார்.