ஆடி முதல் செவ்வாய்; அம்மனுக்கு கூழ் படைத்து வழிபட மங்களகர வாழ்வு அமையும்!
தாலி பாக்கியத்திற்காக சுமங்கலிகள் ஆடிமாதத்தில் மேற்கொள்வது அவ்வையார் நோன்பு. ஆடி செவ்வாயன்று நள்ளிரவில் பெண்கள் ஒன்று கூடி இந்த விரதத்தை மேற்கொள்வர்.
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில அம்மன் கோயில்களில் அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறும். பக்தர்கள் வழங்கும் ஆயிரக்கணக்கான கண்ணாடி வளையல்களை சரம்சரமாகக் கோர்த்து அம்மனுக்கு அலங்காரம் செய்வர். மூன்று நாட்கள் கழித்து அந்தக் கண்ணாடி வளையல்களை சுமங்கலிகளுக்குப் பிரசாதமாக வழங்குவர். இதனால் சுமங்கலிகள் குடும்பத்தில் நீடூழி சுகமாக வாழ்வர். வளையல்களைப் பிரசாதமாகப் பெறும் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் மக்கட்செல்வம் இல்லாதவர்களுக்கு நல்ல அழகான குழந்தை செல்வம் கிட்டும்.
தாலி பாக்கியத்திற்காக சுமங்கலிகள் ஆடிமாதத்தில் மேற்கொள்வது அவ்வையார் நோன்பு. ஆடி செவ்வாயன்று நள்ளிரவில் பெண்கள் ஒன்று கூடி இந்த விரதத்தை மேற்கொள்வர். உப்பில்லாத பச்சரிசி மாவில் கொழுக்கட்டை செய்து அவ்வையார் அம்மனுக்குப் படைப்பர். இந்த சமயத்தில் ஆண்கள் அருகில் இருப்பது கூடாது. பூஜையை தலைமையேற்று நடத்தும் வயதான சுமங்கலி, அவ்வையாரின் வரலாற்றை மற்ற பெண்களுக்கு எடுத்துச் சொல்வார். முடிவில் வட்ட வடிவ பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் மாங்கல்யத்தை காட்டுவார். நீரில் தெரியும் பிம்பத்தை மற்ற பெண்கள் வணங்குவர். கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகிலுள்ள சீதப்பால் அவ்வையார் அம்மன் கோயிலில் ஆடி செவ்வாயன்று சுமங்கலிகள் இந்த வழிபாட்டை நடத்துவர். அம்மனை வழிபட்ட பின் உப்பில்லாத கொழுக்கட்டையை பெண்கள் மட்டும் உண்பர். ஆண்கள் இதை பார்க்கவே கூடாது என்பது ஐதீகம். ஆடி செவ்வாயில் அவ்வையார் நோன்பு கடைப் பிடித்தால் தீர்க்க சுமங்கலித்துவம், நீங்காத செல்வம் கிடைக்கும்!