உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காயத்ரி மஹா மந்திர ஜப யக்ஞம் ராமேஸ்வரத்தில் இன்று நிறைவு

காயத்ரி மஹா மந்திர ஜப யக்ஞம் ராமேஸ்வரத்தில் இன்று நிறைவு

ராமேஸ்வரம்; காயத்ரி பரிவார் அமைப்பின் சார்பில், ராமேஸ்வரத்தில், ‘காயத்ரி மஹா மந்திர ஜப யக்ஞம்’ நேற்று துவங்கியது. இன்றும் தொடர்ந்து நடக்கிறது.


மதுரையை தலைமையிடமாகக் கொண்ட ‘காயத்ரி பரிவார்’ அமைப்பின் பெங்களூரின் ஹலசூரு, விஜயநகர் கிளைகள் இணைந்து, தமிழகம் ராமேஸ்வரத்தில் உள்ள சவுராஷ்டிரா சமூக பவனில் ‘காயத்ரி மஹா மந்திர ஜப யக்ஞம்’ நேற்று துவங்கியது. இன்றும் இது தொடர்கிறது. இதில், 50 உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். காயத்ரி மந்திரம் ஜெபிப்பதால் உடல், மனம், ஆன்மா துாய்மையடைந்து, அறிவு, தெளிவு, ஞானம் பெருகும். மன அமைதி, தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும். வறுமை, தடைகள் நீங்கி, பாதுகாப்பு கிடைக்கும். ரத்த ஓட்டம் சீராகி, நரம்புகள் துாண்டப்படும். கம்பீரத் தோற்றம், நல்ல பேச்சு, நேர்மறை ஆற்றல்கள் உருவாகும். ‘காயத்ரி பரிவார்’ அமைப்பு சார்பில், கடந்த, 30 ஆண்டுகளாக, ஆண்டுதோறும் நடந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு, 12 சுற்றுகள், அதாவது 108 முறை வீதம் 50 பேர் ஜபிக்கும் போது, 64,800 முறை மந்திர ஜபம் நடக்கும். நேற்று துவங்கிய ஜபம், நிறைவு நாளான இன்று, எட்டு சுற்றுகள் நடக்க வாய்ப்புள்ளது. மதுரை ‘காயத்ரி பரிவார்’ அமைப்பின் குருஜி வி.வி.ஆர். ஜானகிராம், பெங்களூரு கிளை பரிவார் குருஜி வி.கே. கண்ணன் தலைமையில், உறுப்பினர்கள் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. – நமது நிருபர் –: 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !