உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் கோதண்ட ராமசுவாமி கோயிலில் ஆனி பிரம்மோற்ஸவ தேரோட்டம்

ராமநாதபுரம் கோதண்ட ராமசுவாமி கோயிலில் ஆனி பிரம்மோற்ஸவ தேரோட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி கோயில் ஆனி பிரம்மோற்ஸவ  விழாவில் ரத வீதியில் தேரோட்டம் நடந்தது. 


ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட கோதண்டராம சுவாமி கோயிலில் ஜூலை 13 முதல் 23 வரை ஆனி பிரம்மோற்ஸவ விழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு ஜூலை 14ல் கொடியேற்றம் நடந்தது.  விழாவில்  தினமும் காலையில் பல்லக்கு, இரவில் சிம்மம், ஆஞ்சநேயர், சேஷம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி உலா  நடந்தது.  முக்கிய நிகழ்ச்சியாக ஜூலை 19ல்  கோதண்டராம சுவாமி, சீதா தேவி திருக்கல்யாணம்,  ஜூலை 21ல் இரவு குதிரை வாகனம், இன்று ( ஜூலை 22 ல்) காலையில் அபிேஷகம் செய்யப்பட்டு அலங்காரத்தில் ராமர், சீதா, லட்சுமணர் தேரேற்றம் செய்யப்பட்டு தேரில் நான்கு ரதவீதியிலும் தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.  நாளை (ஜூலை 23) காலை தீர்த்தோத்ஸவம், இரவு தோளுக்கினியன் வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நடத்தப்பட்டு பிரம்மோற்ஸவ விழா நிறைவு பெறுகிறது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !