உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தாலம்மன் கோவில் ஆடி திருவிழாவில் பால்குட ஊர்வலம்

முத்தாலம்மன் கோவில் ஆடி திருவிழாவில் பால்குட ஊர்வலம்

மந்தாரக்குப்பம்: குறவன்குப்பம் முத்தாலம்மன் கோவில் ஆடித் திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குட ஊர்வலமாக எடுத்து சென்று நேர்த்திகடன் செலுத்தி வழிப்பட்டனர்.

முத்தாலம்மன் கோவில் ஆடித் திருவிழாவையொட்டி சேப்ளாநத்தம் அம்பரசன் ஏரிக்கரையில் இருந்து 250 க்கும் மேற்பட்டோர் பால்குடம் ஊர்வலம் துவங்கி முத்தாலம்மன் கோவிலை வந்தடைந்தனர்.

அதை தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிேஷகம், மாவிளக்கு ஏற்றி நேர்த்திக் கடன் செலுத்தி வழிப்பட்டனர்.

அதை தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை 8:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம், பகல் 12:00 மணிக்கு சாகை வார்த்தல், மதியம் 1:00 மணிக்கு மகா தீபாராதனை மற்றும் அன்னதானம் நடக்கிறது.

ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !