முத்துமாரியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல்
ADDED :3 hours ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மந்தைவெளி முத்துமாரியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல் வழிபாடு நடந்தது.
இக்கோவிலில் தேரோட்டம் கடந்த ஜூலை 10ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து பரசுராமர் பிறப்பு, மாரியம்மன் பிறப்பு, காத்தவராயன், ஆரியமாலா பிறப்பு உள்ளிட்ட முத்து மாரியம்மன் புராண கதை நிகழ்ச்சியும் நடந்தது.
நேற்று முன்தினம் மதியம் 2:00 மணிக்கு பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து சுவாமியை வழிபட்டனர். நேற்று காத்தவராயன் சுவாமி – ஆரியமாலா திருக்கல்யாண உற்சவமும், நாளை 28ம் தேதி திருத்தேர் கலச பூஜையும், 29ம் தேதி காலை 9:30 மணிக்கு தேர்த்திருவிழா வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.