ஆடி பவுர்ணமி; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கிரிவலம்
ADDED :18 hours ago
திருவண்ணாமலை; ஆடி மாத பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், ராஜகோபுரத்தை தரிசனம் செய்து ஏராளளான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், அண்ணாமலையார் மலையை கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டு செல்கின்றனர். இதில், ஆடி மாத பவுர்ணமி திதி இன்று 28ம் தேதி இரவு, 7:33 முதல், மறுநாள், 29ம் தேதி, இரவு, 8:58 மணி வரை உள்ளதால், இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.இதனை முன்னிட்டு இன்று ஏராளளான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர்.