உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டை மாரியம்மனை தரிசித்தால் தொழில் வளரும்

கோட்டை மாரியம்மனை தரிசித்தால் தொழில் வளரும்

திருப்பூர் மாவட்டம் பிச்சம்பாளையம் கோட்டை மாரியம்மனை தரிசிப்போம்.

முன்பு இப்பகுதியில் விவசாயி ஒருவர் வாழ்ந்தார். அவரிடம் ஏராளமான பசுக்கள் இருந்தன. அதில் ஒரு பசு மட்டும் பால் தரவில்லை. அதை கண்காணிக்க பசுவை பின்தொடர்ந்தார்.

குறிப்பிட்ட இடம் வந்ததும் அப்பசுவின் மடுவில் இருந்து பால் சொரிந்தது.
அன்றிரவு விவசாயியின் கனவில் தோன்றிய மாரியம்மன், ‘பால் சொரிந்த இடத்தில் நான் இருக்கிறேன். அதை பிரதிஷ்டை செய்’ என கட்டளையிட்டாள்.

அதன் பின் ஊர் மக்களின் உதவியுடன் கோயிலை விவசாயி கட்டினார். இப்பகுதியில் கோட்டை இருந்ததால் அம்மனுக்கு ‘கோட்டை மாரியம்மன்’ எனப் பெயர் வந்தது.     

மாரியம்மனுக்கு வலது புறத்தில் சரஸ்வதியும், இடது புறத்தில் மகாலட்சுமியும் உள்ளனர். சுபநிகழ்ச்சி நடத்துபவர்களும், தொழில் தொடங்குபவர்களும் வெள்ளிக்கிழமையன்று இங்கு வருகின்றனர். அம்மன் முன்பு பூபோட்டு உத்தரவின்படி முடிவு எடுக்கின்றனர். நோய் தீர மாவிளக்கு ஏற்றுகின்றனர்.

மாசி மாதத்தில் பொங்கல், புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடக்கிறது. குழந்தை வடிவில் மாரியம்மன் இங்கு இருப்பது விசேஷம்.  

எப்படி செல்வது: திருப்பூரில் இருந்து 5 கி.மீ.,
நேரம்: காலை 6:00 – 12:00 மணி; மாலை 4:00 –  7:00 மணி
தொடர்புக்கு: 73396 53703, 0421 – 247 2200 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !