உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாயல்குடி சக்தி மாரியம்மன் கோயிலில் ஆடி பொங்கல் விழா

சாயல்குடி சக்தி மாரியம்மன் கோயிலில் ஆடி பொங்கல் விழா

சாயல்குடி: சாயல்குடியில் உள்ள சக்தி மாரியம்மன் கோயிலில் ஆடி பொங்கல் விழா நடந்தது. கடந்த ஜூலை 24 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.


ஜூலை 28 அன்று மாலை கோயில் வளாகத்தில் திருவிளக்கு பூஜையும் அன்னதானமும் நடந்தது. நேற்று காலை 5:00 மணிக்கு கடற்கரை சென்று தீர்த்தம் எடுத்து வந்து 108 பால்குடம் அக்னி சட்டி நகர்வலம் சாயல்குடி பகுதியில் வலம் வந்தது. பின்னர் சக்தி மாரியம்மன் கோயில் வளாகத்தில் நேர்த்திக்கடன் பக்தர்கள் பூக்குழி இறங்கினர். பின்னர் காலை 9:00 மணிக்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. மாலையில் முளைப்பாரி கொலுவிற்கு அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலையில் ஏராளமான பெண்கள் பூத்தட்டுகளை ஏந்தி வந்து அம்மனுக்கு பூச்செரிதல் விழா நடந்தது. இன்று காலை பொங்கல் வைத்தலும், முளைப்பாரி ஊர்வலமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை வணிக வைசிய உறவின் முறையாளர்கள் சங்கத்தினர் மற்றும் கோயில் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !