உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமாயணத்தில் உள்ளது தர்மம் மட்டுமே; தாமல் ராமகிருஷ்ணன் சொற்பொழிவு

ராமாயணத்தில் உள்ளது தர்மம் மட்டுமே; தாமல் ராமகிருஷ்ணன் சொற்பொழிவு

ராஜபாளையம்: ‘‘ராமாயணத்தில் அப்படி இப்படி என்று கிளை கதைகள் இல்லை, முழுவதும் தர்மம் மட்டுமே நிரம்பி உள்ளது,’’ என ராஜபாளையம் கோதண்டராமசாமி கோயிலில் நேற்று சீதா ராமர் எனும் தலைப்பில் தாமல் ராமகிருஷ்ணன் சொற்பொழிவாற்றினார்.


மேலும் அவர் பேசியதாவது: ராமர் பிறந்த ஸ்லோகத்தில் அவருக்கு திருமணம் செய்ய வேண்டும் என தசரதர் கவலைப்பட்டதாக முடிகிறது. தற்போது ஆண் பிள்ளையை பெற்றவுடன் திருமணம் செய்ய வேண்டும் என தசரதன் கவலைப்பட்டது சரி என நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள். ராமர் சீதா திருமணம் முடிந்தவுடன் ஜனகர் கதாபாத்திரம் முடிந்துவிடும். பகவான் என கூறுவது ராமருக்கு பிடிக்காது என்பதால் ராமாயணத்தில் அனைவருமே பெயர் சொல்லி தான் அழைப்பர். 14 குணங்களுக்கும் அடைக்கலம் ஆனவன் ராமன்.‌ தசரதர் போய் கூப்பிட்டும் வராத விசுவாமித்திரர் தனது தேவைக்காக அவரை தேடி அயோத்தி வந்தார். சத்திரிய தர்மபடி 16 வயது ஆகாததால் ராமனை யுத்தம் செய்ய விசுவாமித்திரருடன் அனுப்ப தசரதர் மறுத்தார். மிரட்டியும் தர்மத்தை எடுத்துக் கூறியும் தசரதன் ராமரை அனுப்பாததால், வசிஷ்டர் கூறியதை நினைவூட்டி விசுவாமித்திரர் ராம லட்சுமணரை உடன் அழைத்துச் சென்றதாக கம்பர் குறிப்பிடுகிறார். 24 ஆயிரம் ஸ்லோகங் களைக் கொண்ட வால்மீகி ராமாயணத்தில் 23,999 ஸ்லோகங்களில் இலக்கண பிழை இல்லை. ராமர் வில்லை உடைக்கும் ஸ்லோகத்தில் மட்டும் இலக்கண பிழை இருக்கும். ராமர் வில்லை வளைக்காமல் உடைக்கவே அந்த பிழை உள்ளதாக அர்த்தம். சீதா ராமருக்கு மாலை அணிவிக்கும், தனது பெற்றோர் அனுமதி பெற வேண்டும் என ராமர் கூறியதன் மூலம், தர்மத்தை ராமாயணம் எடுத்துரைக்கிறது, இவ்வாறு அவர் பேசினார். ஆக.2 வரை மாலை 6:00 முதல் 8:00 மணி வரை இவரது சொற்பொழிவு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !