வெளிறிய நிலையில் ஸ்ரீவி., ஆண்டாள் தேர் அலங்கார துணி
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா ஆக.6ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஆக.14ல் தேரோட்டம் நடக்கிறது.
இதனை முன்னிட்டு தேரை தயார் செய்யும் பணி கடந்த ஒரு மாதமாக நடந்தது. இதில் தேர் தட்டுகளின் மேல் போர்த்தப்பட்டுள்ள அலங்கார துணிகள் வெளிறிய நிலையில் காணப்பட்டது மக்களிடம் மனக்குறையை ஏற்படுத்தியது.
புதிய துணியால் அலங்காரப்படுத்த வேண்டும் என இந்து அமைப்புகள், மக்கள் கோரிக்கை எழுப்பினர்.
நேற்று காலை ஹிந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, மாவட்ட தலைவர் யுவராஜ் தலைமையில் கோயில் செயல் அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர்.
இதனையடுத்து செயல் அலுவலர் சக்கரையம்மாள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். வெளிறிய தேர் அலங்கார துணியை மாற்றி விட்டு, புதிய துணிகள் கொண்டு தேரை அலங்காரப் படுத்த வேண்டுமென கோரினர்.