செஞ்சியில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை
செஞ்சி: செஞ்சியில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் உலக நன்மைக்காக மஹாலஷ்மி திருவிளக்கு பூஜை மகாலட்சுமி திருமண மண்டபத்தில் நடந்தது. இதை முன்னிட்டு பிராமணர் சங்க விழுப்புரம் மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் கும்பம், மஹாலஷ்மி பிரதிஷ்டை கணபதி, தன்வந்த்திரி, ம்ருத்யுஞ்சய ஹோமம் செய்தனர். தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு மஹாலட்சுமி திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் கலந்து கொண்ட பெண்கள் குங்குமத்தால் குத்து விளக்கிற்கு 1008 அம்மன் போற்றி துதியும், அர்சனையும் செய்து தீபாராதனை செய்து வழிபட்டனர். திருவிளக்கு பூஜையை ஈஸ்வரன் குருக்கல் நடத்தினார். பெண்களுக்கு மங்கள பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் பிராமணர் சங்க நிர்வாகிகள் லஷ்மணன், ராமச்சந்திரன், தண்டபாணி, கார்த்திகேயன், சிவநாதன், வெங்கடேசன், திண்டிவனம் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.