காரைக்குடி சந்தன முத்துமாரியம்மன் கோயில் திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :4 hours ago
காரைக்குடி: காரைக்குடி காளவாய்பொட்டல் சந்தன முத்து மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும் தீமிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காரைக்குடி காளவாய்பொட்டல் சந்தன முத்து மாரியம்மன் கோயிலில் 29 ஆவது ஆண்டு பூச்சொரிதல் விழா கடந்த ஜூலை 27ம் தேதி கணபதி ஹோமம் மற்றும் காப்பு கட்டுகளுடன் விழா தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஆக.4 ம் தேதி பூச்சொரிதல் விழா மற்றும் மது முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இன்று முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் நிகழ்ச்சியில் நடந்தது. பக்தர்கள் முத்தாலம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு பால்குடம் எடுத்தும் அழகு குத்தியும் கோயிலை வந்தடைந்தனர். தொடர்ந்து கோயில் முன்பு ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.