தொண்டி தர்கா திடலில் மழை பெய்ய வேண்டி சிறப்பு தொழுகை
ADDED :10 hours ago
தொண்டி: தொண்டி தர்கா திடலில் மழை பெய்ய வேண்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்றனர். உலக அமைதிக்காகவும், தற்போது நிலவும் கடும் வறட்சி நீங்கி மழை பெய்ய வேண்டியும் தொண்டி ஐக்கிய ஜமாத் சார்பில் இன்று காலை 8:00 மணிக்கு தொண்டியில் உள்ள மலுங்கு ஒலியுல்லா தர்கா திடலில் இந்த தொழுகை நடந்தது. உலகம் முழுவதும் அமைதி தழைக்கவும், வறட்சி நீங்கி விவசாயம் செழிக்கவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. இது குறித்து ஜமாத் நிர்வாகிகள் கூறுகையில், நாடெங்கும் மழை பொழிந்து வறட்சி நீங்க வேண்டும். குடிநீர் தட்டுப்பாடு நீங்கவும், உலக அமைதி நிலவ வேண்டும் என இறைவனிடம் வேண்டி மனமுருக பிரார்த்தனை செய்தோம் என்றனர். ஏராளமானோர் கலந்து கொண்டனர்.