உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் திருவிளக்கு பூஜை

புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் திருவிளக்கு பூஜை

திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. 


இதையொட்டி, நேற்று காலை 8:00 மணியளவில், உலக மக்கள் நலன் பெற வேண்டி, மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, மாலை 5:00 மணியளவில் பிரகாரத்தில் உள்ள செங்கமல தாயார் சன்னதி முன்பு பெண்கள் குத்து விளக்கேற்றி, அம்மனை வழிபட்டனர். பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !