நயினார்கோவில் வாசுகி தீர்த்த குளக்கரையில் உலக நன்மைக்காக நாக தீப வழிபாடு
ADDED :2 hours ago
நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாத சுவாமி வாசுகி தீர்த்த குளக்கரையில் நாகதீப வழிபாடு நடந்தது.
ராமேஸ்வரம் ராம சேது மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி குழுவினர் நேற்று மாலை 6:00 மணிக்கு மகா தீப வழிபாடு நடத்தினர். தொடர்ந்து உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் பிரார்த்தனை செய்தனர். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச சக்திகளுக்கு சப்த கன்னி பூஜைகள் நடத்தினர். அப்போது 7 கன்னி பெண்கள், 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் 27 சுமங்கலி பெண்களுக்கு பூஜைகள் நடத்தினர். தொடர்ந்து வாசுகி தீர்த்த குள கரையில் நாகராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் தூப தீப வழிபாடு நடத்தினர். பின்னர் மகா நாக தீபம் ஏற்றி வாசுகி தீர்த்த குளம் மற்றும் நாகநாத சுவாமி கோயில் கோபுரத்திற்கு ஆரத்தி காண்பித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.