உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தளவாய்புரம் திரவுபதியம்மன் கோயிலில் பூக்குழி விழா

தளவாய்புரம் திரவுபதியம்மன் கோயிலில் பூக்குழி விழா

தளவாய்புரம்: தளவாய்புரம் அருகே புனல்வேலி திரவுபதி அம்மன் கோயில் ஆடி திருவிழாவை முன்னிட்டு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருவிழா ஜூலை 28-ல் கொடியேற்றத்துடன் துவங்கி பக்தர்கள் காப்பு கட்டுதல் தினமும் அம்மன் அலங்காரம் வீதி உலா நடந்தது.

முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா நேற்று முன்தினம் இரவு நிகழ்ச்சியை ஒட்டி சிறப்பு அபிஷேகங்கள் நடந்து திரவுபதி அம்மன் வீதி உலா வந்து பூக்குழி திடலை அடைந்தார்.

சுற்றுப்பகுதியில் நேர்த்தி கடன் வேண்டிய பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். ஏற்பாடுகளை திரவுபதி அம்மன் கோயில் நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !