தென்பசியார் பாலமுருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா
ADDED :10 hours ago
மயிலம்: மயிலம் அடுத்த தென்பசியார் பாலமுருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா நடந்தது.
விழா, கடந்த 3ம் தேதி துவங்கியது. ஆடி கிருத்திகையை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு 108 பால்குட அபிஷேகம் நடந்தது. 10:00 மணிக்கு பக்தர்களின் மார்பில் உரல் வைத்து மஞ்சள் இடித்தனர். 10:25 மணிக்கு பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேகம், செடல் சுற்றுதல், பழம் போடுதல் நடந்தது.
பிற்பகல் 1:00 மணிக்கு தீ மிதித்தல், காவடி எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு 10:00 மணிக்கு வாண வேடிக்கையுடன் சுவாமி வீதியுலா நடந்தது.