தினம் ஒரு அம்மன்: தம்பதி ஒற்றுமைக்கு பச்சையம்மன்
ADDED :9 hours ago
தம்பதி ஒற்றுமைக்கு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பச்சையம்மனை தரிசிப்போம்.
இங்கு உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயில் அடிவாரத்தில் இவள் இருக்கிறாள்.
சிவபெருமானின் உடலில் இடம் பெற வேண்டும் என விரும்பினாள் பார்வதி. அதற்காக இங்கு தவம் இருந்தாள். அவளே ‘பச்சையம்மன்’ என்ற பெயரில் இங்கு இருக்கிறாள். வெள்ளிக்கிழமையன்று அம்மனுக்கு தீபம் ஏற்றினால் தம்பதி இடையே சண்டையே வராது. பவுர்ணமியன்று வழிபட்டால் உடல்பலம், மனபலம் அதிகரிக்கும்.
இங்குள்ள சிவபெருமானுக்கு ‘மன்னாத சாமி’ என்று பெயர். இங்கு ஆஞ்சநேயர், ஏழு முனீஸ்வரர் சன்னதிகள் உள்ளன. ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, மஹாசிவராத்திரி விழா சிறப்பாக நடக்கிறது.
எப்படி செல்வது: நாமக்கல்லில் இருந்து 40 கி.மீ.,
நேரம்: காலை 7:00 – 12:30 மணி; மாலை 5:00 – 7:00 மணி
தொடர்புக்கு: 80128 98070