தினம் ஒரு அம்மன்: கல்யாணம் நடக்க கல்யாண காமாட்சி அருள்வாள்
கல்யாணம் நடக்க... தர்மபுரி கல்யாண காமாட்சி அம்மனை தரிசிப்போம்.
முன்பு தகடூர் என அழைக்கப்பட்ட ஊர் தர்மபுரி. கடையேழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் ஆட்சி செய்த இடம் இது. 1300 ஆண்டுகள் பழமையான மல்லிகார்ஜூன சுவாமி கோயில் இங்குள்ளது. அம்மனின் பெயர் கல்யாண காமாட்சி.
பெண்களே உயர்ந்தவர்கள் என்பதை உணர்த்த சுவாமி சன்னதியை விட, அம்மன் சன்னதி உயரமாக உள்ளது. சாந்த சொரூபியான காமாட்சியை பார்த்தாலே துன்பம் நீங்கும். மனதில் நிம்மதி நிலைக்கும். திருமணத்தடை விலகி கெட்டி மேளம் ஒலிக்கும். அம்மனுக்கு ஆடிப்பூர திருவிழா சிறப்பாக நடக்கிறது.
விநாயகர், முருகன், சூலினி ராஜ துர்காம்பிகை, சித்தேஸ்வரர், காலபைரவர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. ஆந்திராவில் உள்ள லேபாக்சி கோயில், கர்நாடகாவில் உள்ள பேலுார், ஹளபேடு கோயில்களைப் போல தொங்கும் துாண்கள் இங்கும் உள்ளன.
கலைநயம் கொண்ட இந்த கோயிலை வெள்ளிக்கிழமை அன்று தரிசிப்பது விசேஷம்.
எப்படி செல்வது: தர்மபுரி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ.,
நேரம்: காலை 6:00 – 12:00 மணி; மாலை 4:00 – 8:30 மணி
தொடர்புக்கு: 94430 84116, 99943 62652