உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி அம்மன் கோயிலில் நாளை ஆவணி மூல உற்ஸவ கொடியேற்றம்

மீனாட்சி அம்மன் கோயிலில் நாளை ஆவணி மூல உற்ஸவ கொடியேற்றம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி சுந்தரேஸ்வரர் திருவிளையாடல்கள் நடத்தி காட்டப்படும் ஆவணி மூல உற்ஸவம் நாளை (ஆக., 10) காலை 9:55 முதல் 10:19 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்கி ஆக., 27 வரை நடக்கிறது.

ஆக., 16- முதல் 12 நாட்கள் திருவிளையாடல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

ஆக.,16 கருங் குருவிக்கு உபதேசம், 17ல் நாரைக்கு மோட்சம் அருளியது, 18ல் மாணிக்கம் விற்றல், 19ல் தருமிக்கு பொற்கிழி வழங்கியது,

20ல் உலவாக்கோட்டை அருளியது, 21ல் பாணனுக்கு அங்கம் வெட்டியது,

இரவு திருஞானசம்பந்தர் சைவ சமய ஸ்தல வரலாறு, 22ல் காலை வளையல் விற்ற லீலை, இரவு 7:05 முதல் 7:29 மணிக்குள் சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.

ஆக.,23ல் நரியை பரியாக்கியது, 24ல் புட்டுக்கு மண் சுமந்தது, 25ல் விறகு விற்றது, 26ல் சட்டத்தேர் நடக்கிறது. ஆக.,27 ல் உற்ஸவம் நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !