மகாசக்தி முச்சந்தி மாரியம்மன் கோயில் முளைப்பாரி உற்ஸவம்
ADDED :1 days ago
சோழவந்தான்: மன்னாடிமங்கலம் மகாசக்தி முச்சந்தி மாரியம்மன் கோயில் முளைப்பாரி உற்ஸவம் நடந்தது.
ஜூலை 28 முத்துப்பரப்புதல், காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது.
ஜூலை 29 முதல் தினமும் அன்னதானம், விளக்கு பூஜை, ஆக.3 தங்கும் முளைப்பாரி ஆக.4 வைகையாற்றிலிருந்து சக்திகரகம் எடுத்தல், ஆக.5 பால்குடம், தீச்சட்டி, அம்மன், முளைப்பாரி ஊர்வலம், விளையாட்டு கரகம் நடந்தது.
ஆக.6 கரகம், முளைப்பாரி கரைத்தல், மஞ்சள் நீராட்டுதலுடன் நிறைவடைந்தது.