திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் திருப்பாவாடை மகா நிவேதனம்
ADDED :3 hours ago
கடலுார்: கடலுார், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு நேற்று காலை திருமஞ்சனம், திருப்பாவாடை மகா நிவேதனம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு சேவை சாற்றுமறை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, தேவநாத பெருமாள், ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. இரவு ஏகாந்த சேவை நடந்தது. ஏகாந்த சேவையில் சென்னை, பாபநாசம் பிரம்மஸ்ரீ ரமணி பாகவதர் குழுவினரின் திவ்யநாம சங்கீர்த்தன பஜனை நடந்தது. இதே போன்று, கடலுார், புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவிலில், காலை பெருமாள், ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை பெருமாள், ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜா சரவணக்குமார் செய்திருந்தார்.