கோயில் விழாவை முன்னிட்டு முள்வேலியில் படுத்து பூஜாரி அருள்வாக்கு
கமுதி: கமுதி அருகே பாம்புல்நாயக்கன்பட்டி கிராமத்தில் கரியமல்லம்மாள் கோயில் ஆடி பொங்கல் விழாவை முன்னிட்டு முள்வேலியில் படுத்து பூசாரி சுந்தரராஜ் அருள்வாக்கு கூறினார்.
கமுதி அருகே பாம்புல்நாயக்கன்பட்டி கிராமத்தில் கரியமல்லம்மாள் கோயில் ஆடி பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்புபூஜை நடந்தது.ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும்,பெண்கள் கும்மி அடித்தும் வந்தனர்.விளக்குபூஜை நடந்தது.மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.பின்பு வினோதமான முறையில் பக்தர்கள் சேத்தாண்டி வேடமிட்டும், சாக்கு வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.கரியமல்லம்மாளுக்கு பால்,மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம்,தீபாரதனை நடந்தது.கோயிலில் இருந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக முளைப்பாரி தூக்கி வந்து தண்ணீரில் கரைத்தனர். அப்போது கோயில் பூஜாரி சுந்தரராஜ் இலந்தை முள்வேலியில் படுத்து அருள்வாக்கு கூறினார். இப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் பலரும் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பாம்புல்நாயக்கன்பட்டி கிராமமக்கள் செய்தனர்