உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று ஆவணி அங்காரக பிரதோஷம்; சிவ தரிசனம் செய்ய தீராத கடன் தீரும்!

இன்று ஆவணி அங்காரக பிரதோஷம்; சிவ தரிசனம் செய்ய தீராத கடன் தீரும்!

பிரதோஷம் சிவபெருமானை வழிபட உகந்த மிக முக்கிய தினமாகும். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த ஆலகால விஷத்தை சிவன் உண்டு, உலகைக் காக்க தினமே பிரதோஷ காலமாகும். சிவபெருமானை இன்று நந்தியின் கொம்புகளுக்கு இடையே தரிசிப்பது சிறப்பானதாகும்.


பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் ஜாதக குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினால் எத்தனையோ இன்னல்களுக்கு ஆளாகிறோம். பிரதோஷ விரதம், இவற்றிலிருந்தும் நம்மைக் காக்க வல்லது. பிரதோஷத்தன்று சிவபெருமானை வழிபட்டால் எல்லா குற்றங்களும் பாவங்களும் நீங்கி சகல நன்மைகளும் உண்டாகும். செவ்வாய்க்கிழமையில் வரும் பிரதோஷம் அங்காரக பிரதோஷம் எனப்படும். இந்நாளில் சிவபெருமான், நந்தி தேவர் மற்றும் முருகப்பெருமானை வழிபடுதல் சிறப்பு. சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வில்வ இலை சாற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். இனறு சிவ தரிசனம் செய்ய தீராத கடன்கள் மற்றும் கடன் தொல்லைகள் நீங்கும். விரதமிருந்து சிவனை வழிபடுவோம்.. புண்ணியம் பெறுவோம்..!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !