உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் 55ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா

புதுச்சேரி லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் 55ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா

புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் 55ம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி நேற்று சுவாமிக்கு படி அளக்கும் நிகழ்ச்சி நடந்தது.


புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் 55ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 17 ம் தேதி கொடியேற்றத் துடன் துவங்கி நடந்து வருகிறது.இதையொட்டி, அன்று முதல் வரும் 27 ம் தேதி வரை தினமும் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் , அபி ேஷகம், ஆராதனைகளும், இரவு பல்வேறு வாகன சுவாமி வீதியுலா நடக்கிறது. நேற்று சுவாமிக்கு படி அளக்கும் நிகழ்ச்சி நடந்தது.முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் உற்சவம் வரும் 26ம் தேதி காலை 9.00 மணிக்கு நடக்கிறது. 27ம் தேதி இரவு திருக்கல்யாணம் வைபவம் நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !