காஞ்சிபுரம் வராஹி அம்மனுக்கு கும்பாபிஷேகம் விமரிசை
ADDED :8 hours ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், சேக்குப்பேட்டை சாலியர் தெரு, செல்வ விநாயகர் கோவிலில், புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள வராஹி அம்மனுக்கு அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா, நேற்று விமரிசையாக நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி மற்றும் நுாதன வராஹி அம்மன் பிரதிஷ்டை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதை தொடர்ந்து, நேற்று காலை 7:00 மணிக்கு, கலச பூஜை, விசேஷ திரவிய ஹோமம், வராஹி மூலமந்திர ஹோமம் நடைபெற்றது. காலை 9:30 மணிக்கு, வராஹி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.