உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீ சபரீச பஜன் மண்டலியின் நாம சங்கீர்த்தன இசை நிகழ்ச்சி

ஸ்ரீ சபரீச பஜன் மண்டலியின் நாம சங்கீர்த்தன இசை நிகழ்ச்சி

 கோவை: ஸ்ரீ சபரீச பஜன் மண்டலி சார்பில் நாமசங்கீர்த்தன இசை நிகழ்ச்சி, ராம்நகர் ராமர் கோயிலில் நடந்தது.பேரூர் சத்யாபாகவதர் குழுவினரின் இசை நிகழ்ச்சியில் ‘மஹா கணபதிம் மனஸாஸ்மராமி’ என்ற பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. ராமபிரானை துதித்து, ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனைகளும், கிருஷ்ணலீலா தரங்கிணி கீர்த்தனைகளும் பாடப்பெற்றன. மிருதங்கம், வயலின், ஹார்மோனியம் இசைக்கப்பட்டன. திரளான பக்தர்கள் நாமசங்கீர்த்தனஇசை மழையில் நனைந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !