உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வட பொன்பரப்பில் பழமையான கோவில் திருப்பணிகள் தொடக்க பூஜை

வட பொன்பரப்பில் பழமையான கோவில் திருப்பணிகள் தொடக்க பூஜை

மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள வடபழத்தில் மிகவும் பழமையான கோவில் திருப்பணிக்கான பூஜை போடும் நிகழ்ச்சி நடந்தது.


மூங்கில்துறைப்பட்டு அடுத்த வட பொன்பரப்பில் உள்ள மிகவும் பழமையான சக்தி விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவில் உள்ளது.இக்கோவில்கள் மிகவும் பழமையான கோவிலாக உள்ளதால் மழைக்காலங்களில் தண்ணீர் கோவிலுக்குள் செல்வதும், கோவில் சுற்றி நிற்பதமாக இருந்து வந்தது.இதனைப் பார்த்த பொதுமக்கள் கோவிலை புதுப்பிக்க வேண்டும் என்று ஒன்று கூடி பேசி முடிவு எடுத்தனர்.தற்போது இந்த கோவில்களை இடித்து திருப்பணிகள் நடைபெற ஊர் பொதுமக்கள் முன்னிலையில் நேற்று பூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றன.இந்நிகழ்ச்சியில் வடபொன்பரப்பி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !