சிவாலயங்களில் பிரதோஷம் வழிபாடு; பக்தர்கள் பரவசம்
திருப்பூர்: ஆவணி மாத முதல் பிரதோஷமான இன்று, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடுகளை நடத்தினர்.
மாலை 4:00 மணிக்கு, மூலவர் மற்றும் அதிகார நந்தி, உமாமகேஸ்வரருக்கு அபிேஷக பூஜையும், அதனை தொடர்ந்து, அலங்கார பூஜையும் நடந்தது. தொடர்ந்து, வெள்ளி ரிஷப வாகனத்தில், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உமாமகேஸ்வரர், வெளிபிரகாரத்தை மூன்று முறை வலம்வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ‘ஓம் நமசிவாய ’கோஷமிட்டபடி, பக்தர்களும் சுற்றி வந்து வழிபட்டனர்.
எஸ்.பெரியபாளையம் ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவில், அலகுமலை ஆதிகைலாசநாதர் கோவில், சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவில், பழங்கரை பொன்சோழீஸ்வரர் கோவில், பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர், அபிேஷகபுரம் ஐராவதீஸ்வரர, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், சேவூர் வாலீஸ்வரர் கோவில் என, சுற்றுப்பகுதியில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும், ஆவணி மாத முதல் பிரதோஷ பூஜைகள் நடந்தன. ஏராளமான சிவனடியார்கள், பக்தர்கள் பங்கேற்று, எம்பெருமானை வழிபட்டனர்.