பந்தலுார் கோவில் கட்டுமான பணி சிறப்பு பூஜையுடன் அடிக்கல்
பந்தலுார்: பந்தலுார் அருகே, பொன்னானி ஸ்ரீ மகா விஷ்ணு கோவிலில், உப கோவில்கள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
பந்தலுார் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகாவிஷ்ணு கோவில் அமைந்துள்ளது. கோவில் புனரமைப்பு பணிகள் தற்போது நடந்து வருகிறது. அதில், உப கோவில்களான ஐயப்பன், வன துர்கா, நாகராஜா கோவில்கள் கட்டுமான பணி நடக்க உள்ளது. தாம்புல பிரசன்ன அறிவுரை படி மேற்கொள்ளப்படும் இந்த கோவில்கள் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. காலை விஷ்ணு பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
தொடர்ந்து, கோவில் தந்திரி தினேஸ் நம்பூதிரி தலைமையிலும், கோவில் நிர்வாகி ஸ்ரீகுமார் நம்பூதிரி முன்னிலையிலும் சிறப்பு பூஜை நடந்தது. கோவில் மேலாளர் சந்தியாகோபி தலைமையில் கோவில் மேல்சாந்தி சுதீஷ், சிற்பி ஹரிதாஸ் மற்றும் புனரமைப்பு கமிட்டி நிர்வாகிகள் இணைந்து அடிக்கல் நாட்டினர்.
நிகழ்ச்சியில், ஊட்டியில் இருந்து தொடர் சமுதாய தலைவர் மந்தேஷ் குட்டன் தலைமையில் கராஸ் குட்டன், சீமை குட்டன், தேவாய் தலைமையிலான குழுவினர் பங்கேற்று தங்கள் கலாச்சார முறைப்படி, கட்டுமான பணிகள் நல்ல முறையில் நடக்க., சிறப்பு பிரார்த்தனை செய்தனர். பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.